• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கணவனின் காதல் கடிதத்தை ஆடையாக்கி அழகு பார்த்த அம்பானி மருமகள்

கணவன் கொடுத்த காதல் கடிதத்தை ஆடையாக்கிய ராதிகா மெர்ச்சண்ட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவராக பார்க்கப்படுவர் தான் முகேஷ் அம்பானி.

இவரின் இளைய மகன் - ஆனந்த அம்பானிக்கு இன்னும் சில நாட்களில் வெகு விமர்சையாக திருமணம் நடக்கவிருக்கின்றது.

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் ராதிகாவும் ஆனந்த் அம்பானியும் சிறு வயது முதல் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது.

பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் இரண்டும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன.

இந்த நிலையில், சொகுசு கப்பலில் நடந்த இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி போது ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஆனந்த் அம்பானி, ராதிகாவின் 22 ஆவது பிறந்த நாள் அன்று தன்னுடைய காதலை கொட்டி ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை ராதிகா தனது வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல ஆசைப்பட்டு ஆடையாக வடிவமைக்க முடிவு செய்துள்ளார்.

கடிதத்தில் வரும் வார்த்தைகளை அப்படியே அச்சிட்டு லண்டன் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் ஊண் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

இவருடைய வடிவமைப்பில் உருவான ஆடையை தான் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கும் அணிந்து வந்துள்ளார்.

இதன்போது ஆன்ந்த் - ராதிகா இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும், வருகின்ற ஜூலை 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வெர்ஷன் சென்டரில் அவர்களுடைய திருமணம் நடக்கவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply