• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் தல M.S தோனி - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தியா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் அந்த அணி 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது.

பல இக்கட்டான சூழல்களிலும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி, ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், தோனி இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்

இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "ஒருமுறை வாழ்வில் கிடைக்கும் அரிய வீரர். புதிய பொறுப்பு; என்றென்றும் தொடரும் பந்தம்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சென்னை அணியின் தொடக்க காலம் முதல் பல வெற்றிகள், சவால்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களில் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பிலும் தோனி தொடர்ந்து அணியுடன் பயணிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தோனியின் புதிய பொறுப்பு குறித்த அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
 

Leave a Reply