• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய அணியில் ரொனால்டோவுக்கு மரியாதை இல்லை - தாயார் குற்றச்சாட்டு

உலக புகபெற்ற காலபந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் தேசிய அணியில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என அவரது தாயார் டோலோரஸ் அவெய்ரோ குற்றம்சாட்டியுள்ளார்.

தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும், டென்மார்க்குக்கு எதிராக போர்த்துக்கல் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது அந்த அணிக்குத் தகுதியானதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரொனால்டோ இல்லாத நேரத்தில் அவருக்கான பாராட்டு நிகழ்ச்சியை நடத்தியது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் ஜோர்கே ஜீசஸ், ரொனால்டோ போர்த்துக்கல் கால்பந்தின் ஒரு சகாப்தம் என்றும், அவரை தேசிய அணி ஒருபோதும் மறக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாயார் என்ற முறையில் டோலோரஸ் தனது மகனுக்காகப் பேசுவது இயல்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரொனால்டோவின் தேசிய அணி ஓய்வு மற்றும் அவருக்குக் கிடைத்த மரியாதை தொடர்பான இந்தக் கருத்துகள் போர்த்துக்கல் கால்பந்து வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
 

Leave a Reply