ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்
இலங்கை
பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று சென்றுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த அறிவிப்பின்படி அவர் ஆஜராகத் தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று இன்று (29) அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளது.






















