வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப் - எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம்
இலங்கை
வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்
தனது வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் எண்ணெய் விநியோகம் விரிவடையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் அமெரிக்க மக்களுக்கான எரிபொருள் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், வெனிசுலாவை பொருளாதார ரீதியாக செழிப்பான பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய மசகு எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.





















