விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு - விமான ஊழியர்கள் இருவர் பலி ;4 பேர் வைத்தியசாலையில்
வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றும் விமான ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதில் 6 விமான ஊழியர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அனோபிலஸ் என்கிற நுளம்பு கடித்ததாலேயே குறித்த 6 விமான ஊழியர்களும் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் மலேரியா நோய்த் தாக்கத்தை முற்றாக ஒழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், வெளிநாடுகளுக்கு சென்ற விமானத்துக்குள் நுழைந்த நுளம்புகளே மீண்டும் ஜெர்மனி சென்றிருக்கலாம் என்றும் அவை குறித்த விமான ஊழியர்களை கடித்ததாலேயே, அவர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் உறுதிப்பட கூறுகின்றனர்.






















