• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

இலங்கை

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக் குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியினை பொலிசார் மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு நேற்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திடீர் சோதனையின் பொழுது 15 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி மிக்க மரக்குற்றிகள் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட நடவடிக்கை பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போத பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பாரவூர்தி,  மரக்குற்றிகள் என்பவற்றை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்
 

Leave a Reply