வவுனியாவில் பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
இலங்கை
பெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்போம் என்ற கருப்பொருளில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத குரு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததோடு பௌத்த பிக்குவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் இளைஞர்கள் ஜோதிகா என சிலர் கலந்து கொண்டனர்.























