• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நினைவின் ஈரம் காயவில்லை இன்னும்...

சினிமா

2002ஆம் ஆண்டு
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட
மறுநாள் காலை
எழுத்தாளர் ஜெயகாந்தனை
அவரது இல்லம்தேடி
வாழ்த்தச் சென்றேன்
வரவேற்பறையில்
அவர் மட்டுமே இருந்தார்
இடுப்பில் லுங்கியோடும்
திறந்த மார்போடும்
அமர்ந்திருந்தார்
கொண்டுசென்ற
பொன்னாடையை
இழுத்துப் போர்த்து
அவர் மார்பை மறைத்தேன்
'ஞானபீடம் அடைந்ததற்கு
வாழ்த்துக்கள்' என்றேன்
மறுமொழி இல்லை;
சிரித்துக்கொண்டார்
சிலநிமிடங்கள்
சொல்லாடல் ஏதுமின்றி
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டு
உட்காரந்திருந்தோம்
புழுக்கமான
மெளனம் நிலவியது
வணக்கம் சொல்லி
விடைகொண்டேன்
24 ஆண்டுகட்குப் பின்னும்
நினைவின் ஈரம்
காயவில்லை இன்னும்

"கவிப்பேரரசு" வைரமுத்து 

Leave a Reply