• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஆரம்பம்

இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வாரம் நாட்டில் நிலவிய மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க இலங்கை பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சையானது‍ இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

முன்னைய அட்டவணைப் படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.

பரீட்சை நடைபெறாத தினங்களுக்கான பரீட்சையானது டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான புதிய அட்டவணை அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வழங்கப்படும்.

இதேவேளை, மோசமான வானிலையால் வெகு தொலைவில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள் அருகிலுள்ள தேர்வு நிலையங்களுக்கு சென்று பரீட்சை எழுத முடியும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply