ஓடும் ரயிலில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணி படுகாயம்
இலங்கை
எல்ல – கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய – இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
37 வயதுடைய ஈரானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு காயமடைந்தவர் ஆவார்.
தற்சமயம் அவர், சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
நானுஓயாவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெண் ரயிலின் மிதி பலகையில் நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அவர், அதே ரயிலில் நானுஓயாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்பியூலன்ஸ் மூலமாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.