• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கை கையளிப்பு

இலங்கை

நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள் ஆராயப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதில் சில பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சட்டத்தின் பிரகாரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் இரத்து செய்யப்படும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இதனுடன் தொடர்புடைய திட்டங்களில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply