• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூசா வைத்தியசாலையில் விசேட சோதனை

இலங்கை

பூசா சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் பல தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 05 கையடக்கத் தொலைபேசிகளும்  சார்ஜர்களும் 08 டேட்டா கேபிள்களும் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply