சதொச ஊடாக தேங்காய் விற்பனைக்கு சலுகை
இலங்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் இதற்காக பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேங்காய் உற்பத்தி தொடர்பாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் அமைப்பு உள்ளதுடன் அரசு தோட்டங்களில் உள்ள தென்னை பொருட்களை நகர்ப்புற மக்களுக்கு 130 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 220 ரூபா விலையில் இரண்டு இலட்சம் கிலோ அரிசியை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.