ரணிலின் பொருளாதாரக் கொள்கையை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து செல்கின்றதா? – நாமல் கேள்வி
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து
செல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எனவே அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்ன என்பதை சபையில் தெளிவுபடுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை என்பது தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தான். ஆனால் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா. ஜனாதிபதி கொள்ளை பிரகடன உரையில் வரியை குறைக்கவேண்டும்.
வருமானத்தை அதிகரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ரணில் முன்னெடுத்த அதே ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த ஜ.எம்.எப் உடன் இணங்கியுள்ளார். ஜ.எம்.எப் இன் உடன்படிக்கையுடன் செயற்படுகின்ற நீங்கள் எவ்வாறு உங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப் போகின்றீர்கள். ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையை முன்னெடுக்கப்போகின்றீர்களா அல்லது உங்கள் கொள்கையுடன் செயற்படபோகின்றீர்களா
அரசாங்கம் இந்த சபைக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியில் 159 சிறந்த பேச்சாளர்கள் உள்ளனர். ஜனாதிபதியும் தேர்தல் மேடைகளில் சிறந்த பேச்சாளராக காணப்பட்டிருந்தார். ஆனால் மக்கள் சிறந்த செயல் வீரர்களையே எதிர்பார்க்கின்றனர்”இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.