கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி
கனடா
கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் வின்னிபெக் வடக்கு மானிடோபா பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயுதத்துடன் இருந்த சிறுவனே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளான்.
கூரிய ஆயுதமொன்றுடன் மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்ட சிறுவனை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.