• Welcome to TamilsGuide
செய்திகள் 1

An unusual Love Story - Miss You படத்தின் டிரெய்லர் வெளியீடு

சினிமா

கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெயிலரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். ட்ரெயிலர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

Leave a Reply