திருமண பார்ட்டியில் கலந்துக் கொண்ட தனுஷ் மற்றும் சிம்பு - புகைப்படம் வைரல்
சினிமா
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த திருமண பார்ட்டியில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு கலந்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு மற்றும் தனுஷ் இடையே எப்பொழுதும் ஒரு பகை போட்டி இருக்கும் என திரையுலகில் இருப்பவர்கள் அறிந்ததே. ஆனால் அதை எல்லாம் பொய் என நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து விழாவில் கலந்துக் கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.