• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த நிலையில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மீசாலைப் பகுதியை சேர்ந்த 25 வயதுடைள சிவகுமார் ராகுலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள் அவா்களை மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து கொடிகாம பொலிஸார் சந்தேக நபர்களை மீட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டி ஒன்று நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் இறுதி போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெறவிருந்தது.

இதன்போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply