• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனவர்களின் பிரச்சனை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் விசேட சந்திப்பு

இலங்கை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மீனவர்கள் இழுவைமடி தொழிலை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் இன்றுடன் நீக்கப்படுகின்ற நிலையில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

குறித்த இழுவைமடி தடைக்காலத்தை மேலும் நீக்குமாறு வடக்கு மாகாண மீனவர்கள் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இதற்கும் உரிய தீர்வினை வழங்குவாரா என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply