• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதகமான தீா்வின்றேல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை – புகையிரத நிலைய அதிபர் சங்கம்

இலங்கை

சேவைத்துறையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழு 18 ஆம் திகதி சாதகமான தீர்வினை வழங்காவிட்டால் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு,ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி புகையிரத அதிபர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக 14 ஆம் திகதி அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து, புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று சபை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அதற்கமைய, நிறைவேற்று சபையில் உறுதியான தீர்வு எட்டப்படாத நிலையில் பதில் புகையிரத பொது முகாமையாளர் உட்பட புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பதில் அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தீர்மானத்தை கைவிட்டுள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண வகுக்கப்பட்ட செயற்திட்டத்தில் ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் காணப்படுவதால் இறுதி தீர்மானம் எடுப்பது தாமதமாகியுள்ளது என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தோடு, இது தொடர்பான உறுதியான தீர்மானத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிப்பதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும, அன்றைய தினதி சாதகமான தீர்வின்றேல் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply