• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க

இலங்கை

13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும்

இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும்.

13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர்.

அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை.

13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும்.

ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும்.

இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா்.
 

Leave a Reply