• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்கு திடீா் விஜயம்

இலங்கை

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன், அவருடன், கலந்துரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தையொட்டி மாவட்டத்தின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply