• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்

இலங்கை

“தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தூய்மையான அரசியல் கலாசாரத்தை எவ்வாறு உருவாக்குவது தொடர்பாக அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு கலந்துரையாடலாக முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த கலந்துரையாடலை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
 

Leave a Reply