• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் – வங்காலை வடக்குப் பிரதேசத்தில் திடீரென உட்புகுந்த கடல்நீர்

இலங்கை

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளன.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்ததுடன், திடீரென கடல் நீர் உட்புகுந்தமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று நிலமையை பார்வையிட்டதுடன் விடயம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply