• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி வெற்றிவேலு சறோஜினிதேவி

பிறப்பு 23 DEC 1944 / இறப்பு 23 NOV 2026

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா, R.D.S வீதி பட்டகாட்டை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு சறோஜினிதேவி அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் தங்கம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெற்றிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(லண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரன், கருணாகரன்(லண்டன்), கவின்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகலச்சுமி(லண்டன்), நாகதேவி(பாக்கியம்- இலங்கை), காலஞ்சென்ற சாயாதேவி, நடேசமூர்த்தி(மூர்த்தி- இலங்கை), சண்முகானந்தம்(ஆனந்தம்- இலங்கை), தில்லைராஜா(சிறி- லண்டன்), காலஞ்சென்ற வசந்தகுமாரி, விஜயகுமாரி(கலா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமராவதி, சிந்துஜா, மதி ஆகியோரின் மாமியாரும்,

ஷோவ்வியா, சில்வியா, அட்ஷயன், அஷ்வினி, அஷ்மிதா, ஜஸ்மிதன், கருணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து வவுனியா தச்சனாங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபா - மகன்

    Mobile : +447930277730

பிரபா - மகன்

    Mobile : +94775385141

கருணா - மகன்

    Mobile : +447958585567

கருணா - மகன்

    Mobile : +94772793186

Leave a Reply