• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாய்லாந்து எரிபொருள் களஞ்சியசாலையில் பாரிய வெடிப்பு

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள பாங்க்சாக் (Bangchak) எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் களஞ்சியசாலையில் இன்று (26) பாரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு அண்மையில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply