• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வச்சிரவேலு வடிவேலு

பிறப்பு 28 JUN 1944 / இறப்பு 09 AUG 2025

யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வச்சிரவேலு வடிவேலு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வச்சிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வடிவேலு நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பகீரதி மற்றும் தர்ஷினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், ஸ்ரீகாந்தன், சிபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நறோஷன், பிருந்தலக்‌ஷ்மி, நிதர்ஷனன், பிரணவி, வைஷ்ணவி, சயந்தவி, சதுஷ்யன், சாயிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மீனாட்சி, சிவபாக்கியம் மற்றும் வள்ளிப்பிள்ளை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, கனகரத்தினம், யோகராசா மற்றும் சண்முகலிங்கம், லீலாவதி, சத்தியேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராசரத்தினம் மற்றும் துஷ்யந்தி, மகேந்திரன், திருலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மீசாலை வடக்கு வேம்பிராய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: நறோஷன்- பின்லாந்து
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94773341872

Leave a Reply