• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் மீதான புதிய வான்வழி தாக்குதல்கள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

வளைகுடா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது உடனடியாகப் புதிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளாா்.

கத்தாா் நாட்டின் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானியுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் ஈரான் போா் மற்றும் அதனால் ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் விலை உயா்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர உள்நாட்டிலும் கடும் அரசியல் அழுத்தம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவைத் தாக்குதலைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொண்டதால், தற்போதைய அமைதி முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இம்முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளாா்.

அமெரிக்க படைகள் எந்த நேரமும் போருக்குத் தயாா் நிலையில் இருந்தாலும், தற்போதைக்குத் தீவிர ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் சூழல் இல்லை என்றும், ராணுவ ரீதியாக ஈரான் கடும் பின்னடைவைச் சந்தித்துவிட்டதால் போா் நடைமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ட்ரம்ப் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடா்ந்து நீடிக்கும். அதில் எவ்விதத் தளா்வும் இருக்காது.  
 

Leave a Reply