சீனாவில் 30 வயதில் 14 வீடுகள் வாங்கி ஓய்வு பெற்ற இளைஞர்
சீனாவில் 30 வயதில் 14 வீடுகள் வாங்கி ஓய்வு பெற்ற இளைஞர் ஒருவர், பராமரிப்புச் செலவு காரணமாக ரியல் எஸ்டேட் முதலீட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
சீனாவின் சாங்ஷா (Changsha) நகரைச் சேர்ந்த ஃபான் ஜூஞ்சீ (Fan Junjie) என்ற 30 வயது இளைஞர், சுகாதாரத் துறை விற்பனைப் பணியிலிருந்து விலகி 30 வயதிலேயே ஓய்வு பெற முடிவு செய்தார்.
இதற்காகத் தனது சேமிப்பான 2 மில்லியன் யுவான் (சுமார் 3,00,000 அமெரிக்க டாலர்) தொகையைக் கொண்டு 14 பழைய வீடுகளை விலைக்கு வாங்கினார்.
இந்த வீடுகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 2,00,000 யுவான் (சுமார் 30,000 டாலர்) வாடகை வருமானம் பெற்று அவர் தனது ஓய்வு கால வாழ்க்கையைத் தொடங்கினார்.
இருப்பினும் வீடுகளைப் பராமரிப்பதில் ஏற்படும் செலவுகள், வீடுகள் காலியாக இருக்கும் காலங்களில் ஏற்படும் இழப்புகள், வரிகள் மற்றும் தரகர் கட்டணங்கள் ஆகியவற்றால் முழு வாடகைத் தொகையும் லாபமாகத் தங்குவதில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
இதன் காரணமாக, அக்டோபர் 26 அன்று இனி புதிதாக ரியல் எஸ்டேட்டில் வீடுகள் வாங்கப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். வாடகை வருமானத்தை மட்டுமே நம்பியிராமல், பங்குச்சந்தை நிறுவனங்களின் பங்குகளின் பங்காதாயம் (Dividends) மற்றும் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளார்.
சீனாவில் நிலவும் கடுமையான வேலைப் பளு மற்றும் பணியிட அழுத்தங்களுக்கு மத்தியில், இவரைக் போன்று இளம் வயதிலேயே நிதிச் சுதந்திரம் அடைந்து ஓய்வு பெறும் போக்கு (FIRE Movement) இளைஞர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.






















