• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொலம்பியாவில் சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகள் உயிரிழப்பு

இலங்கை

கொலம்பியாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சோப் கட்டியொன்றைச் சாப்பிட்ட 33 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் சில நிமிட இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவின் மெடலின் பகுதியில் சனிக்கிழமை (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லிண்டா ரோசா மற்றும் லாரா மரியா ( வயது 33) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், உயிரிழந்த சகோதரிகளின் வீட்டிலிருந்து அரைகுறையாகச் சாப்பிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சோப் கட்டியைக் கைப்பற்றியுள்ளனர்.

அதில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், அதனடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply