• Welcome to TamilsGuide
செய்திகள் 1

900த்தை கடந்த பலி எண்ணிக்கை - ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் எபோலா பரவல் 

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் மொத்தம் 2,344 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 930 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பாகும்.

மே 15 அன்று கிழக்கு காங்கோவில் அறிவிக்கப்பட்ட எபோலா நோய்ப் பரவலானது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது. எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும்.

இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை. இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர்.

நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply