வெள்ளை மாளிகை இரகசியத் தகவல் அம்பலம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் தொரிவித்துள்ளது.
இதைப்பயன்படுத்தி பொலி மார்க்கெட்' போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக (சுமார் ₹5.77 கோடி) இலாபம் ஈட்டியுள்ளதை 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் இதன் மூலம் $1,00,000-க்கும் மேல் சம்பாதித்துள்ளதாக அமெரிக்காவின் (CFTC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிதி ஆதாயங்களுக்காக இரகசியத் தகவல்களைப் பகிரக் கூடாது என்று ஏற்கனவே மார்ச் மாதம் ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் இந்த முறேகடு நடந்துள்ளது.
இதனால் வெள்ளை மாளிகையின் பல உயர் அதிகாரிகள் தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது






















