உலக அரசியலில் புதிய நகர்வு - அமெரிக்கா–ஈரான் நாடுகளுக்கிடையே பாலமாக பாகிஸ்தான்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் பாகிஸ்தான் ஆற்றியுள்ள பணி குறித்து சனோபர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கமர் சீமா கருத்து வெளியிட்டுள்ளார்.
அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடம்பெற்ற மிகவும் தீவிரமான இராஜதந்திர முயற்சிகளில் இதுவும் ஒன்று என கமர் சீமா குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், பாகிஸ்தான் தனது முயற்சியை ஒருபோதும் கைவிடாது என்றும் அவர் கூறினார்.
ஈரானுக்கு இறுதித் தீர்வொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைமைத்துவம் முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே பாகிஸ்தானின் முக்கிய பணியாக இருந்தது எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும் பணியைப் பாகிஸ்தான் செம்மையாகச் செய்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சர்வதேச ரீதியில் பாகிஸ்தானுக்குப் பாராட்டுக்கள் கிடைத்து வருவதுடன், இரு தரப்பினரும் பாகிஸ்தானைப் புகழ்ந்துள்ளனர்.























