• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனுஷ்- லப்பர் பந்து இயக்குநர் கூட்டணியில் இணையும் கதாநாயகி

சினிமா

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' (Kara) படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், மற்றும் பலர் நடித்துள்ளனர். 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக 'லப்பர் பந்து' புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு D56 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply