சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது தொடர்பான முன்னெடுப்பை மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பில் இன்றைய தினம் திருக்கோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள், மறை மாவட்ட ஆயர், தென் கையிலை ஆதீனம், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் போன்றவற்றை சந்தித்த பின்னர் தென் கையிலை ஆதீனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.























