• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி

கனடா

கனடாவின் வாகன் (Vaughan) நகரில் இடம்பெற்ற இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக யார்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெஸ்டன் சாலை – ரௌன்ட்ரீ டெய்ரி சாலை சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல துப்பாக்கி குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு, குறிப்பிட்ட நபரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக உறுதியாக கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கிப்லிங் சாலை – வுட்பிரிட்ஜ் அவென்யூ பகுதியில் வாகனம் தீப்பற்றியதாக வந்த தகவலின் அடிப்படையில் மற்றொரு சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை சந்தேகநபர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், சந்தேக வாகனம் கருப்பு நிற SUV என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply