சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பிறந்த குழந்தை - ஜாக்பாட்' பரிசு
சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மெட்ரோ நிலையத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த மெட்ரோ ஊழியர்கள் மற்றும் பயணிகள், அவரை உடனடியாக ரயில் நடைமேடையில் அமர வைத்தனர்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் வலி அதிகரித்ததால், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு நடைமேடையிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மற்றும் மெட்ரோ பணியாளர்களின் துரித முயற்சியால் அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும் சேயும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்செயலான நிகழ்வை கொண்டாடும் விதமாகவும், அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டும் விதமாகவும், சவூதி மெட்ரோ நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சவூதி மெட்ரோ ரயிலில் முற்றிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமான ஒரு இக்கட்டான நேரத்தில் பிறந்த குழந்தையினால், அந்த முழு குடும்பத்திற்கும் இந்த 'ஜாக்பாட்' பரிசு கிடைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.





















