• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அருட்தந்தை தாக்கப்பட்டமைக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை

அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27)காலை 9 மணி அளவில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக தெல்வத்தை சந்தியில் அருட்தந்தையர்கள் , அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர சபை முன்றத்திலிருந்து நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி ஊடாக தெல்வத்தை சந்திக்கு பேரணியாக வந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருட் சகோதர சகோதரிகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் , அருட் சகோதர சகோதரிகள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.  
 

Leave a Reply