தென் கொரியாவில் விமான விபத்து - 28 பேர் உயிரிழப்பு
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியா திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவர் ஒன்றில் வேகமாக சென்று மோதியது. இதில் விமானம் உடைந்த நிலையில், வேகமாக தீப்பிடித்து வெடித்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.