• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 60 பேர் உயிரிழப்பு

இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 44 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில்  மீண்டும் தலைதூக்கியுள்ள  பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தேவையான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply