2025 அஸ்வெசும கொடுப்பனவு - வர்த்தமானி வெளியீடு
இலங்கை
2025 ஆம் ஆண்டில் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்தத் தொகைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமாவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
* மிகவும் வறியவர்கள்: 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை மாதாந்திர கொடுப்பனவு 17,500 ரூபா.
* வறியவர்கள்: 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை மாதாந்திர கொடுப்பனவு 10,000 ரூபா.
* ஆபத்திற்குட்பட்டவர்கள்: 2025 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரை மாதாந்திர கொடுப்பனவு 5,500 ரூபா.
* நிலையற்றவர்கள்: 2025 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மாதாந்திர கொடுப்பனவு 5,000 ரூபா.
புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம், 2024 மே 17 அன்று முதன்முதலில் வழங்கப்பட்ட முந்தைய ‘அஸ்வெசுமா’ நலத்திட்ட உதவித் திட்டம் இப்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள பயனாளிகளுக்கு, முந்தைய திட்டத்தின் கீழ் பணம் செலுத்துதல் 2024 டிசம்பர் 31 வரை தொடரும்.
மேலதிகமாக திட்டத்திற்கு இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி உறுதி செய்யப்பட்டவுடன் பணம் செலுத்தும் உரிமையைப் பெறுவார்கள்.
இதில் ஏற்கனவே மேல்முறையீடு செய்தவர்களும் அடங்குவர்.
நலன்புரிப் பலன்களுக்கான அவர்களின் தகுதிகளைத் தீர்மானிப்பதற்கான விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.