• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவேக் பிரசன்னா நடித்த Family படம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

சினிமா

யூகே கிரியேஷன்ஸ் தயாரிப்பின் கீழ் உதய் கார்த்திக் குமார், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஃபேமிலி படம். இப்படத்தை அறிமுக இயக்குனரான செல்வா குமார் திருமாறன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை மெய்யேந்திரன் மேற்கொள்கிறார். படத்தின் இசையை அனிவீ மற்றும் அஜேஷ் இசையமைத்துள்ளனர். அஜேஷ் பிரபல விலங்கு வெப் தொடருக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மூன்று சகோதரர்களை சுற்றி நடக்கும் கதையாகும். படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சகோதரன் எடுக்கும் திரைப்படத்திற்காக மொத்த குடும்பமும் பனம் செலவளித்து படத்தை இயக்கும் காட்சிகள் டிரெய்லரில் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a Reply