• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் போலீஸ் வாகனத்தை களவாடியவர் கைது

கனடா

கனடாவின் வாங்கூவார் பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றை களவாடி சென்ற நபரை கைது அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் வாகனத்தை களவாடி கிழக்கு வங்குவார் பூங்கா பகுதியில் அதனை செலுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பெண் ஒருவர் பதற்றம் அடைந்த நிலையில் இருப்பதனை அவதானித்த பொலிஸார் வாகனத்தை விட்டு இறங்கி சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் வாகனத்தை களவாடி சென்றுள்ளார்.

களவாடி சென்ற வாகனத்தை பூங்காவில் இருந்த குடும்பங்கள் மீது செலுத்த முயற்சித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

சம்பவத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்படாமை அதிர்ஷ்டவசமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் 
 

Leave a Reply