• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்

இலங்கை

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவநர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவினை வழங்கும் சமுதாய சமையலறை திட்டம் ‘அல்லிராஜா நிறைவகம்’ ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த திட்டத்தில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தம் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ் மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகள் மாணவர்களுக்கான சத்துணவினை வழங்கும் வகையில் அல்லிராஜா நிறைவகம் கடந்த தினங்களில் நிறுவப்பட்டு உணவு வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகள் பாடசாலை நாட்களில் தொடர்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு நிறை உணவு,பால் மற்றும் முட்டை வழங்கப்படுவதுடன், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மதிய உணவு வழங்கப்பட்டவுள்ளது.

குறித்த செயற்பாட்டிற்காக சமயலறை லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக புனர்நிர்மானம் செய்யப்பட்டு பாடசாலை சமூகத்திடம் 02.10.2024 செவ்வாய் அன்று கையளிக்கப்பட்டது.

லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக மேற்கொள்ளப்படும் பணிகளில் அல்லிராஜா நிறைவகம் சிறப்பு மிக்கதொரு தனித்துவமான பணியாகக் கருதப்படுகின்றது, மேலும் பல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக ‘அல்லிராஜா நிறைவகம்’ உருவாக்கம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ளஅர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.
 

Leave a Reply