• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு

இலங்கை

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.

இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் மேலும் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன.

இன்றைய கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply