• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - சம்பந்தன் அறிவிப்பு

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக அறிவிக்கவேண்டும் என்றும் இரா.சம்பத்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து கொண்டு யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply