• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஜக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள
இலங்கையர்களை மீட்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவினை  அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நாட்டின் பிரதான கட்சியான ஜக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

குறிப்பாக மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள இலங்கையர்கள் மற்றும் ரஸ்யா படையில் கூலிப்படைகளாக செயற்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இராஜதந்திர ரீதியான முன்னெடுப்புக்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் மட்ட வேலை வாய்ப்புகள் வழங்குவதாகக்கூறி மியன்மாருக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். இதேபோன்று அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்து ஏமாற்றப்பட்டு, பலர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ஏமாற்றப்பட்டவர்கள் யுக்ரைன் ரஸ்ய போரில் கூலிப்படைகளாக செயற்படுகின்றனர். எனவே இவ்வாறு ஏமற்றப்பட்டு சிக்கியுள்ள இலங்கையர்களை காப்பாற்றும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழி காட்டுதலில் ஆராயப்பட்டுள்ளன.

இதனை தொடந்து ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பிரதிநிதிகளை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி. அலவத்துவல, கே.சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இருநாடுகளுக்கும் பயணிக்கவுள்ளனர்.

எதிர்க்கட்சி என்ற வகையில் வெளிநாடுகளில் சிக்கியள்ள இலங்கையர்களுக்காக மேற்கொள்ள முடியுமான

நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் ஆராயவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply