• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது.  இன்று பிற்பகல் புத்தளம் மாவட்டத்தின் முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இரண்டு யுவதிகள் மீது மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

இரண்டாவது யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கனமழை  காரணமாக  ஹங்வெல்ல – வகை பிரதேசத்தில் வீதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக நாட்டின் பலபகுதிகளிலும் மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் உள்ளிட்ட உடமைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply