திரு சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் சதானந்தன்
மலர்வு 10 SEP 1942 / உதிர்வு 17 NOV 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் சதானந்தன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சபாபதிப்பிள்ளை மகேஸ்வரி சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானேஸ்வரி சதானந்தன் அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தாமரை, சிவசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினிதேவி ராமநாதன், காலஞ்சென்ற S.M. சிறிகாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகுல், சியா, சான்வி, ஷிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சதானந்தன் அவர்கள் லண்டனில் , லண்டன் முரசு பத்திரிகையை முதன்முதலில் ஆரம்பித்த ஒரு சாதனையாளர்.
திரு. சபாபதிப்பிள்ளை – மகேஸ்வரி தம்பதிகளின் மகனான திரு. சதானந்தன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் மட்டுமல்ல; லண்டனுக்கு வந்ததிலிருந்து தமிழ்மொழியை எப்படியாவது இங்கு வாழும் தமிழர்களுடன் இணைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்த தமிழ்ப்பற்றாளர்.
அவர் ஓர் ஆன்மிகவாதி. சைவ பக்தி வழியில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். யோகிகளையும் ஞானிகளையும் சித்தர்களையும் படித்து உணர்ந்தவர். கிரியா யோகம் தொடக்கம் தியானம் வரை பல்வேறு ஆன்மிக நெறிமுறைகளுடன் வாழ்ந்தவர்.
திரு. சதானந்தன் அவர்கள் அமுதத் தமிழைத் தனது உயிராகக் கருதி வாழ்ந்த ஓர் உத்தமத் தமிழ்மகன்.
அவருடைய தந்தையார் சைவநெறி லண்டனில் வேரூன்றுவதற்குக் காரணமாக இருந்தார். முருகன் கோயிலைக் கட்டியது போல, லண்டனில் தமிழ்மணம் வீசும் விதைகளை விதைத்தவர் திரு. சதானந்தன் அவர்கள்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – லண்டன்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 30 Nov 2026 10:00 AM - 12:00 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 30 Nov 2026 12:30 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
Lunch
Get Direction
Monday, 30 Nov 2026 2:00 PM - 4:00 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தொடர்புகளுக்கு
சிவசங்கர் - மகன்
Mobile : +447540270843
செந்தாமரை - மகள்
Mobile : +447577563884






















Leave a Reply